• Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.
    (3 John : 2)
  • Who Himself bore our sins in His own body on the tree, that we, having died to sins, might live for righteousness — by whose stripes you were healed.(1 Peter 2:24)
  • I am the Lord who heals you. (Exo 15:26)
  • He sent his word, and healed them, and delivered them from their destructions. (Ps 107:20)
  • Bless the Lord, O my soul, and forget not all his benefits: Who forgives all your iniquities; who heals all your diseases. (Ps 103:2-3)
  • The thief does not come except to steal, and to kill, and to destroy. I have come that they may have life, and that they may have it more abundantly. (John 10:10)
  • Oh Lord my God, I cried unto you, and you have healed me. (Ps 30:2)
  • I shall not die, but live, and declare the works of the Lord. (Ps 118:17)
  • You restore my health and make me to live! (Isa 38:16)
  • Heal me, O LORD and I shall be healed; save me, and I shall be saved: for you are my song. (Jer 17:14)
  • For I will restore health unto you, and I will heal you of your wounds, says the Lord.(Jer 30:17)
  • …He Himself took our infirmities and bore our sicknesses. (Matt 8:17)

குணமாக்கும் தேவ வசனங்கள்

    • பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
      நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
      (3
      யோவான் : 2)
    •  நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். (1 பேதுரு 2:24)
    • நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். (யாத்திராகமம் 15:26)
    • அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். (சங்கீதம் 107:20)
    • என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி… (சங்கீதம் 103:2-3)
    • திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)
    • என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். (சங்கீதம் 30:2)
    • நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். (சங்கீதம் 118:17)
    • என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர். (ஏசாயா 38:16)
    •  கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி. (எரேமியா 17:14)
    • அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 30:17)
    • அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (மத்தேயு 8:17)